2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, விலகல் முறையிலான கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை வென்றே இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியை வேகமாக ஆரம்பித்த டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், தமதணியின் கிறிஸ்டியன் எரிக்சனின் உதையை அவரின் சக வீரர் டெலே அல்லி போட்டியின் 11ஆவது நிமிடத்திலேயே கோலாக்க ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

எனினும் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் போல் பொக்பா கொடுத்த பந்தை, போட்டியின் 24ஆவது நிமிடத்தில் அவரது சக வீரர் அலெக்ஸிஸ் சந்தேஸ் முட்டிக் கோலாக்க கோல் எண்ணிக்கையை மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.

இந்நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் எரிக் டயர் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்தொன்று, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர் கிறிஸ் ஸ்மோலிங்கில் பட்டு கோல் கம்பத்தில் பட்டுத் திரும்ப, 1-1 என்ற கோல் கணக்கிலேயே முதற்பாதி முடிவடைந்தது.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், போட்டியின் 62ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அன்டர் ஹெரேரா பெற்ற கோலோடு, போட்டியின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் யுனைட்டெட், 20ஆவது தடவையாக கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X