2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் இந்தியா:இரண்டாவது போட்டி நாளை

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி மொகாலியில் நாளை காலை 11.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கையணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் தொடரை இழக்காமலிருப்பதற்கு இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க வேண்டுமென்பதால் இப்போட்டி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போட்டிக்கான ஆடுகளமும் தரம்சாலாவைப் போன்று வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்றே கருதப்படுகிறது. இப்போட்டியும் பனிப்பொழிவை தவிர்த்துக் கொள்ளும் முகமாகவே காலை 11.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுகிறது.

முதலாவது போட்டியைப் போன்றே இலங்கையணியின் வேகப்பந்துவீச்சாளர்களான சுரங்க லக்மால், நுவான் பிரதீப் ஆகியோருடனும் முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸின் ஓவர்கள் முக்கியமானதாகக் காணப்படுகிறன. இவர்களின் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுவிட்டால், இந்திய அணியை இலங்கை சமாளித்து விடும்.

மறுபக்கம், முதலாவது போட்டியில் குறிப்பிடத்தக்களவு குறைந்த ஓட்ட எண்ணிக்கை என்றாலும் அதை நேர்த்தியான வகையில் இலங்கை எட்டியிருந்தது. அந்தவகையில், துடுப்பாட்ட பக்கமும் அஞ்சலோ மத்தியூஸுடன் உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரட்னவை இலங்கை அணி நம்பிக் காணப்படுகிறது. இப்போட்டியிலும் முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறபோதும் தனஞ்சய டி சில்வா உபாதையிலிருந்து குணமடைந்தால், லஹிரு திரிமான்னயை பிரதியீடு செய்யும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இதுதவிர, இந்திய அணி வேகப்பந்துவீச்சுக்கு தடுமாறியமையால் சச்சித் பத்திரணவுக்குப் பதிலாக டுஷ்மந்த சமீர விளையாடும் சந்தர்பமும் காணப்படுகிறது.

இந்திய அணிக்கு முதலாவது போட்டியின் துடுப்பாட்டப் பெறுபேறுகள் மறக்கப்பட முடியாதவையாக இருக்கின்றபோதும் அனுபவமற்ற மத்திய வரிசையைத் தாங்கி நிற்கின்ற மகேந்திர சிங் டோணியோடு, இத்தொடருக்கான இந்திய அணித்தலைவரான ரோகித் ஷர்மா மற்றும் ஷீகர் தவான் பெறும் ஓட்டங்களே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கக் கூடியதாகவிருக்கும்.

முதலாவது போட்டியில் விளையாடிய அதே இந்திய அணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும் யுஸ்வேந்திர சஹாலுக்குப் பதிலாக சிதார்த் கோல் அணியில் இடம்பெறும் வாய்ப்பு காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X