2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா 2ஆவது டெஸ்ட்: தடுமாறுகிறது தென்னாபிரிக்கா

Gopikrishna Kanagalingam   / 2018 ஜூலை 22 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,  கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் 2ஆவது போட்டியில் இன்றைய (22) மூன்றாவது நாள் முடிவில் தமது இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி தடுமாறி வருகிறது.

490 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, இன்றைய நாள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்துள்ள தென்னாபிரிக்கா, 139 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி, 351 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி பின்னிலையில் உள்ளது.

துடுப்பட்டத்தில் தெயுனீஸ் டி பிரையன் 45 ஓட்டங்களுடனும் தெம்பா பவுமா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக, டீன் எல்கர், 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.பந்துவீச்சில் ரங்கன ஹேரத், அகில தனஞ்சய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் டில்ருவான் பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக, 3 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களுடன், தனது இரண்டாவது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், திமுத் கருணாரத்ன 85, அஞ்சலோ மத்தியூஸ் 71, தனுஷ்க குணதிலக 61, றொஷென் சில்வா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கேஷவ் மஹராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றதுடன், தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .