2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இலங்கை எதிர் பாகிஸ்தான் ஒ.நா.ச.போ தொடர் நாளை

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 09:22 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் டுபாயில், இலங்கை நேரப்படி, நாளை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

2010ஆம் ஆண்டிலிருந்து, பாகிஸ்தான் அணியின் சொந்த மண் போன்று ஆன ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானை விழுத்திய உற்சாகத்தில் இலங்கை அணி ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் களமிறங்குகிறது.

மறுபக்கம், எதிர்வுகூற முடியாத அணியாக இருக்கும் பாகிஸ்தான், கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக செயற்படாதபோதும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சம்பியனான உற்சாகத்துடன் பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டி காணப்படுகின்றது.

இலங்கைக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டின் தலைமைத்துவ முடிவுகள் கேள்விகளுக்குட்பட்டிருந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை சிறப்பாகவே சப்ராஸ் அஹமட் சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

மறுபக்கம், டெஸ்ட் போட்டிகளில், தினேஷ் சந்திமால், இலங்கையணியை சிறப்பாக வழிநடத்தியிருந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், இலங்கை அணியின் தலைவரான உபுல் தரங்க, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கவனஞ் செலுத்தும் பொருட்டு, டெஸ்ட் போட்டிகளில் ஆறு மாத விடுப்பொன்றை எடுத்துக் கொண்ட நிலையில், இப்போட்டிகளில் பிரகாசிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.

அடுத்து, சிரேஷ்ட வீரர் லசித் மலிங்க நீக்கப்பட்ட குழாமாக காணப்படும் இலங்கையின் வேகப்பந்து வீச்சுக் குழாம் பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. இல்லாவிடின் விரும்பியோ விரும்பாமலோ லசித் மலிங்கவிடமே இலங்கையணி அடைக்கலத்தை தேடும். துடுப்பாட்ட பக்கம் சகலதுறை வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ், அசேலக குணரட்ன இல்லாத நிலையில், உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல மீதே அதிக பொறுப்பு காணப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில், காயம் காரணமாக மொஹமட் ஆமிர் இடம்பெறாதபோது, ஹஸன் அலி, ஜூனைட் கான் எனப் பலமானதாகவே பந்துவீச்சு வரிசை காணப்படுகிறது. ஓட்டங்களைப் பெறுவதற்கு, இளம் வீரர் பாபர் அஸாம், சிரேஷ்ட வீரர் ஷோய்ப் மலிக் ஆகியோரையே தங்கியுள்ளது.

அடுத்து இந்தத் தொடர், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொடரை, 5-0 என்று இலங்கை அணி கைப்பற்றினால் மட்டும் தற்போதுள்ள எட்டாமிடத்திலிருந்து ஏழாமிடத்துக்கு முன்னேறலாம். மறுபக்கம், பாகிஸ்தான் இத்தொடரை 5-0 என்று வென்றாலும் தரவரிசையில் ஆறாமிடத்திலேயே காணப்படும்.  


You May Also Like

  Comments - 1

  • Nikaf Friday, 13 October 2017 04:36 AM

    No. Eyechele

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .