2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை தொடரை புறக்கணிக்கின்றது பார்மி ஆர்மி?

Editorial   / 2018 மே 24 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக இவ்வாண்டின் இறுதியில் இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும்போது இச்சுற்றுப் பணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ இரசிகர் குழாமான பார்மி ஆர்மி புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலத் தொடரின்போது எதிர்கொண்ட பிரச்சினைகள், குறித்த தொடரின் டெஸ்ட் போட்டிகளுக்கான அனுமதிச் சீட்டுகளின் அதியுயர் விலைகள் காரணமாகவே இச்சுற்றுப் பயணத்தை பார்மி ஆர்மி புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2012ஆம் ஆண்டு காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இரசிகர்களிக்கு நாளொன்றுக்கு 25 ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் அறவிடப்பட்டதுடன், இலங்கை வாசிகளுக்கு ஒரு ஸ்டேர்லிங் பவுணுக்கு குறைவான தொகையே அறவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பாரிய எண்ணிக்கையான ஆதரவாளர்கள், ஒல்லாந்துக் கோட்டைக்குச் சென்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், நிற்கின்ற பகுதியிலிருந்து இங்கிலாந்து இரசிகர்களை வெளியேற்றிய மைதான பாதுகாப்பு அதிகாரிகள் அது இலங்கையர்களுக்கு மட்டுமெனக் கூறிய நிலையில் இது பலத்த விமர்சனத்தை எழுப்பியிருந்தது.

இந்நிலையிலேயே, மேற்படி நிலைமைகள் தொடராதிருக்க இலங்கை கிரிக்கெட் சபையை தொடர்பு கொண்டிருந்த பார்மி ஆர்மி, அரங்கங்களுக்குள் இங்கிலாந்து இரசிகர் வலையங்களை உருவாக்குமாறும் இரண்டு வகையான அனுமதிச்சீட்டு விலைகளை குறைக்குமாறும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில், சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பான குறிப்பிட்ட உறுதிமொழிகளை மாத்திரம் வழங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, பார்மி ஆர்மியுடன் முறையாக தொடர்பு கொள்ளத் தவறியிருந்தது.

அந்தவகையில், உள்ளூர் இரசிகர்களிடன் நாளொன்றுக்கான அனுமதியாக, நிற்கும் இடங்களுக்கு 300 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன் காலியில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் உட்பட மூன்று டெஸ்ட்களுக்கும் ஐந்து நாட்களுக்கான அனுமதிச்சீட்டுகளையும் வாங்கினால், விலைகுறைவான அனுமதிச்சீட்டுகள் நாளொன்றுக்கு 50 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு சற்றுக் குறைவாக இருக்கும் என பார்மி ஆர்மிக்கு கூறியுள்ளது.

இந்நிலையிலேயே, 2012ஆம் ஆண்டு விட்ட தவறை மீண்டும் இலங்கை கிரிக்கெட் சபை புரிவதாகவும் விலைகள் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளது. அனுமதிச்சீட்டு விலை தவிர, வெளிநாட்டு வங்கிகளின் மூலம் பணம் அனுப்புவதற்கான 25 ஐக்கிய அமெரிக்க டொலர் கட்டணம், ஐக்கிய இராச்சிய வங்கிகளின் கட்டணம் உள்ளடங்கலாக ஒரு டெஸ்ட் போட்டியைப் பார்ப்பதற்கு 270 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை செலவளிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியை இங்கிலாந்தில் பார்வையிடுவதற்கு 168.50 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களே செலுத்த வேண்டியுள்ளது.

இதுதவிர, ஐந்தாவது நாளுக்காக 65 ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்ட நிலையில், இந்தியாவுக்கெதிரான டெஸ்டின் ஐந்தாம் நாளுக்கான அனுமதிச் சீட்டின் விலை 20 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களாகவேயுள்ளது. இதேவேளை, டெஸ்ட் முன்னரே முடிவடைந்தால், வானிலையால் நேரம் இழக்கப்பட்டால் எல்லாம் பணம் மீளளிக்கப்படும் வசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையிலேயே, எந்தவொரு பரிமாற்றத்தையும் மேற்கொள்ளவேண்டாம் என பார்மி ஆர்மி ஆலோசனை கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X