2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை தோல்வி; இந்தியா வெற்றி

Editorial   / 2017 ஜூன் 25 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின், பெண்கள் உலகக் கிண்ணம், நேற்று ஆரம்பமானது. தொடரின் முதல்நாளில் இடம்பெற்ற போட்டிகளில், இலங்கை அணிக்குத் தோல்வியும் இந்திய அணிக்கு வெற்றியும் கிடைத்தன.

பிறிஸ்டலில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் சாமரி அத்தப்பத்து 53 (66), சாமரி பொல்கம்போல 49 (113), நிபுணி ஹன்சிகா 31 (45) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹொலி ஹடில்ஸ்டன், 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 37.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில் சுசி பேட்ஸ் ஆட்டமிழக்காமல் 106 (109), அமி சட்டர்த்வெய்ட் ஆட்டமிழக்காமல் 78 (103) ஓட்டங்களைப் பெற்றனர்.

அடுத்ததாக, இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையில் போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஸ்மிரி மந்தானா 90 (72), பூனம் றாவத் 86 (134), மித்தாலி ராஜ் 71 (73) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹீதர் நைட், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று, 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஃப்ரான் வில்சன் 81 (75), ஹீதர் நைட் 46 (69) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 3, ஷீகா பாண்டே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இப்போட்டியில் இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை, ரண் அவுட் முறையில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .