2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக் குழாமில் மீண்டும் யாழ். வீரர் வியாஸ்காந்த்

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளுக்கிடையிலான இரண்டு நான்கு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பிடித்துள்ளார்.

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாள் போட்டியொன்றில் இவ்வாண்டு ஜூலையில் இலங்கையணியில் அறிமுகத்தை மேற்கொண்ட வியாஸ்காந்த், இலங்கைக் குழாமில் இடம்பெறும் இரண்டாவது தடவை இதுவாகும். அப்போட்டியில் விளையாடியதன் பிற்பாடு, குறித்த இந்திய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கானதும் ஆசியக் கிண்ணத்துக்கானதுமான தயார்நிலை வீரர்களில் வியாஸ்காந்த் இடம்பிடித்திருந்தார்.

சுழற்பந்துவீச்சாளரான வியாஸ்காந்த், இந்திய அணிக்கெதிரான மேற்கூறப்பட்ட தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பிடித்து, அத்தொடரின் முதலாவது போட்டியில் விளையாடவில்லையென்றபோதும் இரண்டாவது போட்டியில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், என்.சி.சி மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கெதிரான முதலாவது நான்கு நாள் போட்டியில் வியாஸ்காந்த் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த தொடருக்கான இலங்கைக் குழாம் பின்வருமாறு,

  1. கமில் மிஷர, 2. நவோத் பரணவிதான, 3. டினீத் ஜெயகொடி, 4. நிபுன் தனஞ்சய (அணித்தலைவர்), 5. சொனால் டினுஷ, 6. மொஹமட் ஷமஸ், 7. டுனித் வெல்லலகே, 9. சந்துன் மென்டிஸ், 10. விஜயகாந்த் வியாஸ்காந்த், 11. ஏ. டில்ஹார, 12. சி. கலிந்து, 13. றொஹான் சஞ்சய, 14. சி. விஜேசிங்க. 15. நவீன் பெர்ணான்டோ, 16. அஷேன் டானியல்.

இதேவேளை, யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுஷன் ஆசியக் கிண்ணக் குழாமில் இடம்பெற்றிருந்தபோதும் அத்தொடரின் ஒரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .