2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக் குழாம்கள் அறிவிக்கப்பட்டன

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், ஆசியக் கிண்ண இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சுரங்க லக்மால், குசல் மென்டிஸ், ஷெகான் ஜெயசூரிய, டில்ருவான் பெரேரா உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. இந்நிலையில், சதீர சமரவிக்கிரம, லக்‌ஷன் சந்தகான், நுவான் பிரதீப் உள்ளிட்டோர் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குழாம்: தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), உபுல் தரங்க, சதீர சமரவிக்கிரம, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, லசித் மலிங்க, அமில அப்போன்ஸோ, லக்‌ஷன் சந்தகான், நுவான் பிரதீப், கசுன் ராஜித, குசல் பெரேரா.

இந்நிலையில், இன்று குழாமை அறிவிக்கும்போது கருத்துத் தெரிவித்த தலைமைத் தேர்வாளர் கிரேமி லப்ரோய், அடுத்தாண்டு உலகக் கிண்ணம் வரை தினேஷ் சந்திமாலே அணித்தலைவராக இருக்கின்றார் என்றும் உலகக் கிண்ணத்துக்கான தமது திட்டங்களில் அஞ்சலோ மத்தியூஸ் இன்னும் காணப்படுகின்றார் என்று கூறியிருந்தார்.

இதேவேளை, கருத்துத் தெரிவித்திருந்த விளையாட்டு அமைச்சர் பைஸர் முஸ்தபா, கிரிக்கெட் தேர்வுக் குழுவால் எடுக்கப்படும் முடிவுகளில் தலையிடமாட்டேன் எனவும் ஆனால், தேர்வுக் குழு தவறான முடிவுகளை எடுத்தால் தன்னால் தேர்வுக் குழுவை நீக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான குழாமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழம் பின்வருமாறு,

குழாம்: தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, கெளஷால் சில்வா, குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, றொஷேன் சில்வா, டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், மலிந்த புஷ்பகுமார, அகில தனஞ்சய, சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார, லக்‌ஷன் சந்தகான்,  நிரோஷன் டிக்வெல்ல.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .