2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரே

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை முதன்முறையாக உள்ளடக்கிய, இவ்வாண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள தொடர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில், வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, 2020ஆம் ஆண்டு ஜூலை தொடக்கம் 2022ஆம் ஆண்டு ஜூன் வரையான காலப் பகுதியில், பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை மாத்திரமே சொந்த மண்ணில் இலங்கை விளையாடவுள்ளது. எவ்வாறெனினும், கடந்த காலங்களைப் போலவே குறித்த காலப் பகுதியில் வேறு தொடர்களை இலங்கை கிரிக்கெட் சபை நடாத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், அடுத்தாண்டு முதல் அதற்கடுத்த 2020ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியே இலங்கையணிக்கு மிகவும் நெருக்கடியான காலப் பகுதியாகக் காணப்படுகின்றது. குறித்த காலப் பகுதியில், ஒன்பது இருதரப்புத் தொடர்களில் இலங்கை பங்கேற்கவுள்ளது. இதில், ஐந்து டெஸ்ட் தொடர்களும் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களிலுள்ள அணிகளும் அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் இரண்டு இரண்டாண்டு காலப் பகுதியில் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் விளையாடவுள்ளன. இது ஆறு தொடர்களைக் கொண்ட லீக் சுற்றையும் பின்னர் முதலிரண்டு அணிகளுக்கான இறுதிப் போட்டியையும் கொண்டுள்ளது. இந்நிலையில், குறித்த இறுதிப் போட்டியை, தரப்படுத்தலில் முதலிடம் பிடிக்கும் அணியின் நாட்டிலா அல்லது இங்கிலாந்திலா நடத்துவது என்பது குறித்த கலந்துரையாடல்கள் தொடர்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .