2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கைக்கெதிரான இ-20 தொடரில் நியூசிலாந்தின் தலைவராக செளதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்தின் அணித்தலைவராக சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தொடரிலிருந்து நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், மற்றைய சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழாமுக்கு விக்கெட் காப்பாளர் டிம் செய்ஃபேர்ட், துடுப்பாட்டவீரர் டொம் ப்ரூஸ், வேகப்பந்துவீச்சாளர் செத் றான்ஸ் ஆகியோர் நியூசிலாந்துக் குழாமுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். நியூசிலாந்து இறுதியாக விளையாடிய இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரான, இந்தியாவுக்கெதிரான தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் இவர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

இதேவேளை, இந்தியாவுக்கெதிரான நியூசிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் டவ் பிறேஸ்வெல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

குழாம்: டிம் செளதி (அணித்தலைவர்), டொட் அஸ்டில், டொம் ப்ரூஸ், கொலின் டி கிரான்ட்ஹொம், லொக்கி பெர்கியூசன், மார்டின் கப்தில், ஸ்கொட் குக்லஜின், டரைல் மிற்செல், கொலின் மன்றோ, செத் றான்ஸ், மிற்செல் சான்ட்னெர், டிம் செய்ஃபேர்ட் (விக்கெட் காப்பாளர்), இஷ் சோதி, றொஸ் டெய்லர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .