2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் ஒரெயொரு சுழற்பந்துவீச்சாளராக அஜாஸ் பட்டேல் மட்டுமே இடம்பிடித்தார். நியூசிலாந்து இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டியான பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டை வெல்லக் காரணமாக வில்லியம் சோமர்வில்லி குழாமில் இடம்பெறவில்லை.

இதேவேளை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வில் யங்கும் குழாமில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்துக் குழாமில் இவர் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். எவ்வாறெனினிம் இவர் அணியில் இடம்பெறமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குழாமில் மற் ஹென்றியும் இடம்பெற்றுள்ளபோதும் டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னரைத் தாண்டி அவர் குழாமில் இடம்பிடிப்பாரா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான தொடர், வெலிங்டனில் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் தொடங்குகின்றது.

குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொம் லேதம், ஜீட் றாவல், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ், கொலின் டி கிரான்ட்ஹொம், பி.ஜெ வட்லிங் (விக்கெட் காப்பாளர்), வில் யங், டிம் செளதி, மற் ஹென்றி, அஜாஸ் பட்டேல், ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .