2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஈ.எவ்.எல் கிண்ணத் தொடர்: அரையிறுதியில் செல்சி

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஈ.எவ்.எல் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு செல்சி, பிறிஸ்டல் சிற்றி ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் ஏ.எவ்.சி போர்ண்மெத்தை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் 13ஆவது நிமிடத்தில், சீஸ்க் பப்ரிகாஸிடமிருந்து பெற்ற பந்தை வில்லியன் கோலாக்க செல்சி முன்னிலை பெற்றது. இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் கலும் வில்சன் கொடுத்த பந்தை டான் கொஸ்லிங் கோலாக்க கோல் எண்ணிக்கையை போர்ண்மெத் சமப்படுத்தியது. எனினும் இதைத் தொடர்ந்து, ஈடின் ஹஸார்ட் கொடுத்த பந்தை கோலாக்கிய, மாற்று வீரராகக் களமிறங்கிய அல்வரோ மொராட்டா, 2-1 என்ற கோல் கணக்கில் செல்சிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க அரையிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றது.

இதேவேளை நடப்பு ஈ.எவ்.எல் கிண்ணத் தொடரின் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, பிறிஸ்டல் சிற்றியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

குறித்த போட்டியின் 51 ஆவது நிமிடத்தில் ஜோ பிரயன் பெற்ற கோலின் மூலம் பிறிஸ்டல் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த ஏழாவது நிமிடத்தில் ஸல்டான் இப்ராஹிமோவிக் பெற்ற கோலின் மூலம் மன்செஸ்டர் யுனைட்டெட் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது. எவ்வாறெனினும், போட்டியின் இறுதி நிமிடத்தில் கொரே ஸ்மித் பெற்ற கோல் காரணமாக 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற பிறிஸ்டல் சிற்றி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

அந்தவகையில், ஓர் அரையிறுதிப் போட்டியில், மன்செஸ்டர் சிற்றியை பிறிஸ்டல் சிற்றி எதிர்கொள்வதுடன், மற்றைய அரையிறுதிப் போட்டியில் ஆர்சனலை செல்சி எதிர்கொள்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .