2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உசைன் போல்ட்டின் பதக்கக் கனவு பறிபோனது

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இடம்பெற்றுவரும் உலக தடகள சம்பியன்ஸில் அஞ்சலோட்டப் போட்டியின் போது உசைன்போல்ட்டுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக பதக்கத்தை இழக்க நேரிட்டது.

மின்னல் மனிதன் என்று அழைக்கப்படும் ஜெமெய்க்காவின் உசைன் போல்ட், தனது இறுதிப் போட்டியில் நேற்று கலந்துகொண்டார். அவரது 400X4 அஞ்சலோட்டப் போட்டியைக் காண 56 ஆயிரம் பார்வையாளர்கள் அரங்கில் நிறைந்திருந்தனர்.

பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட உசைன் போல்ட், சிறிது தூரம் ஓடும்போது உபாதைக்குள்ளாகி விழுந்துவிட்டார்.

இதனால், பதக்கம் வெல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெமெய்க்கா அணி தோல்வியடைந்தது.

இந்தப்போட்டியில் பிரித்தானியா தங்கப் பதக்கத்தையும், அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தையும் ஜப்பான் வெண்கலப்பதக்கதையும் பெற்றுக்கொண்டன.

தொடர்புடைய செய்தி: மின்னல் வீரனின் பின்னடைவுக்குக் காரணம் என்ன?

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .