2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘உடல் தொடர்பில் இப்போதும் உறுதியில்லை’

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் இன்னும் மிகவும் பதற்றமாக உள்ளேன். உடல், இன்னும் மிகவும் உறுதியற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் என்னைத் தாங்குகிறது. காயத்திலிருந்து மீண்டு வருவதில் இது மிகப்பெரிய சவால்” என டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கும் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, காலியில், நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், கடந்த நான்கு மாதங்களில், தனது முதலாவது போட்டியில் லோகேஷ் ராகுல் பங்கேற்றிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கெதிராக, சமநிலையில் முடிவடைந்த இரண்டு நாள் போட்டியில் 54 ஓட்டங்களைப் பெற்றபோதும், தான் பழைய நிலைக்கு செல்வதுக்கு நீண்ட காலம் இருக்கிறது என்றவாறான கருத்துகளை லோகேஷ் ராகுல் வெளிப்படுத்தியுள்ளார். குறித்த போட்டியில் லோகேஷ் ராகுல் தவிர, விராத் கோலி, அஜின்கியா ரஹானே, ரோஹித் ஷர்மா, ஷீகர் தவா, ரிதிமான் சஹா ஆகியோரும் ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள்.

இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியிலேயே தோட்பட்டையில் காயமடைந்தபோதும் அத்தொடர் முழுவதும் வலியுடன் விளையாடியிருந்தார். பின்னர், இந்தியன் பிறீமியர் லீக், சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், மேற்கிந்தியத் தீவுகளுக்கான இந்திய அணியின் தொடர்களைத் தவறவிட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .