2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலக பதினொருவர் அணியின் தலைவராக அம்லா?

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள, உலக பதினொருவர் அணியின் தலைவராக, தென்னாபிரிக்க அணியின் ஹஷிம் அம்லா அல்லது அவ்வணியின் டெஸ்ட் தலைவர் ஃபப் டு பிளெஸி ஆகியோர் செயற்படுவர் என, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் நேற்று (22) தெரிவித்தன.

இந்தத் தொடர் பற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், உலகின் முன்னணி வீரர்கள், இந்தத் தொடரில் பங்குபற்றுவர் என, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜம் சேதி தெரிவித்த போதிலும், அவர்களின் பெயர் விவரங்களை, விரைவில் வெளியிடுவதாகவே அறிவித்தார்.

இந்நிலையிலேயே, இது தொடர்பான விவரங்கள் வெளியாகி வருகின்றன. இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள், இந்தத் தொடரில் விளையாடச் சம்மதித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ஹஷிம் அம்லாவும் ஃபப் டு பிளெஸியும், இந்தத் தொடரில் விளையாடச் சம்மதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தத் தாடருக்கான நிதி ஏற்பாடுகள் தொடர்பாகவும் காப்புறுதி சம்பந்தமான விடயங்கள் தொடர்பாகவும், சர்வதேச கிரிக்கெட் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகளின் ஈடுபட்டு வருகின்றன என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்தத் தொடர் முடிவடைந்ததும், இலங்கை அணியும், பாகிஸ்தானில் போட்டிகளில் பங்குபற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர், பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, பாகிஸ்தானில் நடத்துவதற்கான முனைப்புகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, அடுத்த சில மாதங்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில், முக்கியமான காலப்பகுதிகளாக மாறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X