2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலகக் கிண்ணத்தில் டென்மார்க், அவுஸ்திரேலியா

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு டென்மார்க்கும் அவுஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன.

டென்மார்க், அயர்லாந்துக் குடியரசு அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்று தகுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்திருந்த நிலையில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று தகுதிப் போட்டியில், 5-1 என்ற கோல் கணக்கில் வென்ற டென்மார்க், 5-1 என்ற மொத்த கோல்களின் அடிப்படையில் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் டென்மார்க் சார்பாக, கிறிஸ்டியன் எரிக்சன் மூன்று கோல்களையும் நிக்லஸ் பென்ட்னர் ஒரு கோலையும் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டது. அயர்லாந்துக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை ஷேன் டபி பெற்றார்.

அவுஸ்திரேலியா, ஹொண்டூரஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்று தகுதிப் போட்டியிலும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்திருந்த நிலையில், நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இரண்டாவது சுற்று தகுதிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா, 5-1 என்ற மொத்த கோல்களின் அடிப்படையில் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் மைல் ஜெடினக் பெற்றதோடு, ஹொண்டூரஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை மேனோர் பிகுயோரா பெற்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X