2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகக் கிண்ணம்: ஈரானை வென்றது ஸ்பெய்ன்

Editorial   / 2018 ஜூன் 21 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று இடம்பெற்ற ஈரானுக்கெதிரான குழு பி போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது. ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டியகோ கொஸ்டா பெற்றிருந்தார்.

அந்தவகையில், போர்த்துக்கல்லுடனான தமது முதலாவது குழுநிலைப் போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்ட ஸ்பெய்ன், இப்போட்டியில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் மொராக்கோவுடனான போட்டியில் சமநிலை முடிவைப் பெற்றாலே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற சவூதி அரேபியாவுடனான குழு ஏ போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது. உருகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் சுவாரஸ் பெற்றிருந்தார்.

அந்தவகையில், தமது முதலாவது குழுநிலைப் போட்டியில் எகிப்தை வென்றதைத் தொடர்ந்து இப்போட்டியிலும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, குழு ஏயிலிருந்து ரஷ்யாவுடன் உருகுவேயும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. மறுபக்கமாக, தமது முதலாவது குழுந்லைப் போட்டியில் ரஷ்யாவுடன் தோல்வியைத் தளுவிய சவூதி அரேபியா, இப்போட்டியிலும் தோல்வியைத் தளுவியதைத் தொடர்ந்து, எகிப்துடன் சேர்ந்து குழு ஏயிலிருந்து குழுநிலைப் போட்டிகளுடன் தொடரிலிருந்து வெளியேறுகின்றது.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற மொராக்கோவுடனான குழு பி போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது. போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்தார்.

அந்தவகையில், ஈரானுடனான தமது முதலாவது குழுநிலைப் போட்டியிலும் தோல்வியடைந்த மொராக்கோ, இப்போட்டியிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குழுநிலைப் போட்டிகளுடன் இவ் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .