2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: ஊடகக் கடமைகளை புறக்கணித்த இலங்கை

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டியைத் தொடர்ந்ததான ஊடகக் கடமைகளை இலங்கை புறக்கணித்ததைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபையிலிருந்து தடையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆடுகளங்கள், பயிற்சி வசதிகள், போக்குவரத்து வசதிகள், இருப்பிட வசதிகளின் தரத்த்தை இலங்கையின் அணி முகாமையாளர் அசந்த டி மெல் விமர்சித்த சில நாட்களிலேயே மேற்குறித்த புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது.

இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மேற்குறித்த போட்டியில் 87 ஓட்டங்களால் இலகுவாக இலங்கையை அவுஸ்திரேலியா வென்றிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா, தமது அணித்தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்டவீரருமான ஆரோன் பின்ஞ்சின் 153 (132), ஸ்டீவ் ஸ்மித்தின் 73 (59), கிளென் மக்ஸ்வெல்லின் ஆட்டமிழக்காத 46 (25) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 335 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, தமதணித்தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்டவீரருமான திமுத் கருணாரத்னவின் 97 (108), மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் குசல் பெரேராவின் 52 (36) ஓட்டங்கள் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும், மிற்செல் ஸ்டார்க்கிடம் மத்தியவரிசை துடுப்பாட்டவீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து, 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .