2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஊசிப் பிரச்சினையில் தப்பித்தது இந்தியா

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்டில் இன்று ஆரம்பித்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின்போது எழுந்த ஊசிப் பிரச்சினையில், பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் கடுமையான எழுத்து வடிவிலான எச்சரிக்கையுடன் இந்தியா தப்பித்துள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் தங்கியுள்ள பகுதியில், இந்திய குத்துச்சண்டை வீரர்களின் அறைகளுக்கு வெளியே ஊசிகள் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்றதாவென சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதையடுத்து, பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் மருத்துவ ஆணைக்குழுவால், இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கான வைத்தியர் அமோல் பட்டீலுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை சம்மேளன நீதிமன்றம் நேற்று விசாரித்திருந்தது. அதில், உடல்நிலை சரியில்லாத தடகள வீரரொருவருக்கு விற்றமின் பி ஊசியைப் பயன்படுத்தியதை அமோல் பட்டீல் ஒத்துக் கொண்டிருந்ததுடன், கடந்த மாதம் 19ஆம் திகதியிலிருந்து பயன்படுத்தப்பட்ட அனைத்து ஊசிகளையும் விவரித்திருந்தார்.

இந்நிலையியிலேயே, இந்திய அணிக்கு பொறுப்பான விக்ரம் சிஸோடியாவுக்கு எச்சரிக்கை பிரதியொன்றை அனுப்புமாறு பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்துக்கு, சம்மேளனத்தின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X