2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘என் மீதான குற்றச்சாட்டுகள் போட்டி நிர்ணயத்துடன் தொடர்புபட்டவையல்ல’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன் மீதான குற்றச்சாட்டுகள், போட்டி நிர்ணயம், ஆடுகள நிர்ணயம் அல்லது அதனுடன் தொடர்புடையதான மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவையல்ல என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இலங்கையணியின் முன்னாள் தேர்வாளருமான சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணையொன்று தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் அதிகாரிகளிடம் தனது செல்லிடத் தொலைபேசியை வழங்க மறுத்தமை காரணமாகவே ஜெயசூரிய மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிப்படுத்த முடியாத தனிப்பட்ட விடயங்கள் காரணமாகவே ஜெயசூரிய செல்லிடத் தொலைபேசியை கையளிப்பதை தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றில் கோரப்பட்ட தகவலை துல்லியமாக, முழுமையாக வழங்க மறுத்தமை உள்ளடங்கலாக மோசடிக்கெதிரான பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக, மோசடி நடவடிக்கைக்கான ஆதாரத்தை கண்டுபிடிப்பதற்கு வழிகோலக்கூடிய விசாரணையுடன் தொடர்புடைய தகவலை ஒளித்தமை, மாற்றியமை அல்லது அழித்தமை உள்ளடங்கலாக மோசடிக்கெதிரான பிரிவின் விசாரணையைக் குழப்பியமை அல்லது தாமதப்படுத்திய குற்றச்சாட்டுகளையும் ஜெயசூரிய எதிர்கொள்கிறார்.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்னர் ஜெயசூரியாவிடம் மோசடிக்கெதிரான பிரிவு நேர்காணல்களை சில தடவைகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிம்பாப்வேக்கெதிராக கடந்தாண்டு இடம்பெற்ற இலங்கையின் தொடரை மோசடிக்கெதிரான பிரிவு கவனத்தில் கொண்டு ஓராண்டின் பின்னரே ஜெயசூரிய மீது குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜெயசூரிய விளையாடியதைத் தவிர, 2013ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண முடிவு வரை தேர்வாளராக இருந்ததோடு, கடந்தாண்டும் தேர்வாளராக இருந்திருந்த நிலையில், கடந்தாண்டு தேர்வாளராக இருந்ததோடு சம்பந்தப்பட்டதாகவே குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிம்பாப்வேக்கெதிராக கடந்தாண்டு இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 2-3 என இலங்கை தோல்வியடைந்த நிலையில் இலங்கையணியின் செயற்பாடுகள் விமர்சிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த தொடரின் நான்காவது போட்டியே குறிப்பாக கவனம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 301 ஓட்டங்களை வெற்றியிலக்காக சிம்பாப்வேக்கு நிர்ணயிருத்திருந்த நிலையில், டக் வேர்த் லூயிஸ் முறைப்படி சிம்பாப்வே வென்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .