2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எவெர்ற்றனை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகள் வென்றுள்ளன.

மன்செஸ்டர் யுனைட்டெட், 2-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றனை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, அந்தோனி மார்ஷியல், ஜெஸி லிங்கார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இந்த இரண்டு கோல்கள் பெறப்படுவதற்கான பந்துப் பரிமாற்றங்களையும் போல் பொக்பா வழங்கியிருந்தார்.

அந்தவகையில், தொடர்ச்சியாக கடந்த மூன்று போட்டிகளில் சமநிலை முடிவுகளைப் பெற்று வந்த மன்செஸ்டர் அந்தத் தொடர்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து இப்போட்டியில் வென்றது.

இப்போட்டியில், காயம் காரணமாக மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்கள வீரர்களான றொமேலு லுக்காக்கு, ஸல்டான் இப்ராஹிமோவிக் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எவெர்ற்றனுக்கெதிராக பிறீமியர் லீக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் பெறும் 35ஆவது வெற்றியாய் இப்போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் பெற்ற வெற்றி அமைந்திருந்த நிலையில், பிறீமியர் எந்தவோர் அணியாலும் எந்தவோர் அணிக்கெதிராகவும் பெறப்பட்ட அதிகூடிய வெற்றிகள் இதுவாகும்.

இந்நிலையில், லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் பேர்ண்லியை வென்றது. லிவர்பூல் சார்பாக சாடியோ மனே, றக்னர் கிளவன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பேர்ண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொஹன் குட்முன்டசன் பெற்றார்.

இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றி, 3-0 என்ற கோல் கணக்கில் ஹட்டெர்ஸ்பீல்ட் டெளணை வென்றது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, றியாட் மஹ்ரேஸ், இஸ்லம் ஸ்லிமானி, மார்க் அல்பிரைட்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .