2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏபி டி-இன் எதிர்காலம் ஓகஸ்டில் முடிவாகும்

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸின் எதிர்காலம் தொடர்பாக, அவரும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் பேச்சுவார்த்தையை நடத்தி, முடிவை மேற்கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

தென்னாபிரிக்க அணியின் முக்கிய வீரராகக் காணப்படும் ஏபி டி வில்லியர்ஸ், அண்மைக்காலமாகவே, சர்வதேசப் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இதனால், அண்மைக்காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்குபற்றவில்லை.

இந்நிலையிலேயே, அடுத்த சில ஆண்டுகளுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக, ஓகஸ்டில் முடிவு செய்யவுள்ளதாக, ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

"இரு தரப்புக்கும் எது சாத்தியமானது என்பதைப் பார்க்கவுள்ளோம். போட்டிகளை, தேர்ந்தெடுத்துப் போட்டிகளில் பங்குபற்றப் போவதில்லை. மாறாக, அடுத்த சில ஆண்டுகளுக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்குத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள ஏபி டி வில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவதைக் குறைப்பதற்கோ அல்லது அதிலிருந்து ஓய்வு பெறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன எனக் கருதப்படுகிறது.

எனினும், 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்வது, தனது பிரதான கனவு என்று குறிப்பிட்ட அவர், ஆனால் அது, தனது கைகளில் இல்லை எனவும், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்தே, அது தொடர்பான இது முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கிலாந்துடனான தொடர் முடிவடைந்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவுக்குச் சென்று, தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அவர், செப்டெம்பரில், பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடருக்குத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .