2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் றூட்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு ஜோ றூட் முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 135 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே எட்டாமிடத்திலிருந்து, மூன்று இடங்கள் முன்னேறி, ஐந்தாமிடத்தை றூட் அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு:  

  1. விராத் கோலி, 2. கேன் வில்லியம்சன், 3. செற்றேஸ்வர் புஜாரா, 4. ஸ்டீவ் ஸ்மித், 5. ஹென்றி நிக்கொல்ஸ், ஜோ றூட், 7. டேவிட் வோணர், 8. ஏய்டன் மார்க்ரம், 9. ஹஷிம் அம்லா, 10. டீன் எல்கர்.

இதேவேளை, முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு:  

  1. கஜிஸோ றபாடா, 2. பற் கமின்ஸ், 3. ஜேம்ஸ் அன்டர்சன், 4. வேர்ணன் பிலாந்தர், 5. இரவீந்திர ஜடேஜா, 6. ட்ரென்ட் போல்ட், 7. மொஹமட் அப்பாஸ், 8. ஜேஸன் ஹோல்டர், 9. டிம் செளதி, 10. இரவிச்சந்திரன் அஷ்வின்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 127 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு:

  1. ஜேஸன் ஹோல்டர், 2. ஷகிப் அல் ஹசன், 3. இரவீந்திர ஜடேஜா, 4. பென் ஸ்டோக்ஸ், 5. வேர்ணன் பிலாந்தர்.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இங்கிலாந்து, டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், மூன்றாமிடத்திலிருந்து ஐந்தாமிடத்துக்குக் கீழிறங்கியுள்ளது.

முதல் 10 அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. இந்தியா, 2. தென்னாபிரிக்கா, 3. நியூசிலாந்து, 4. அவுஸ்திரேலியா, 5. இங்கிலாந்து, 6. இலங்கை, 7. பாகிஸ்தான், 8. மேற்கிந்தியத் தீவுகள், 9. பங்களாதேஷ், 10. சிம்பாப்வே.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X