2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஒப்பந்தத்தை நீடித்த நோயர்

Editorial   / 2020 மே 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த சில மாதங்களாக நீடித்த தீவிரமான பேரம்பேசல்களைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு வரையான ஒப்பந்த நீடிப்பொன்றுக்கு ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் அணித்தலைவரும் கோல் காப்பாளருமான மனுவல் நோயர் நீடித்துள்ள்ளார்.

பயேர்ண் மியூனிச்சில் அடுத்த பருவகாலத்தில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ள இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான ஷல்கேயின் கோல் காப்பாளர் அலெக்ஸான்டர் நுபெல்லை பயேர்ண் மியூனிச் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து மனுவல் நோயரின் எதிர்காலம் சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய ஒப்பந்தமொன்றில் மனுவல் நோயர் கைச்சாத்திட்டுள்ளார்.

முன்னதாக பயேர்ண் மியூனிச்சுடன் அடுத்தாண்டு வரை ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த மனுவல் நோயர், ஷல்கேயின் அணித்தலைவராகவிருந்த அலெக்ஸான்டர் நுபெல்லின் கைச்சாத்திடலை பயேர்ண் மியூனிச் அறிவித்தபோது அதை விரும்பியிருக்காததுடன், குறிப்பிட்ட எண்ணிகையான போட்டிகளை அவருக்கு வழங்குவது குறித்து தான் யோசிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றை மனுவல் நோயர் கோரியிருந்ததுடன், 20 மில்லியன் யூரோக்களை ஆண்டுச் சம்பளமாகக் கோரியிருந்தார்.

எவ்வாறெனினும், புதிய பருவகாலத்தில் மனுவல் நோயரை அலெக்ஸான்டர் நுபெல் சவாலுக்குட்படுத்த மாட்டார் என பயேர்ண் மியூனிச்சின் முகாமையாளர் ஹன்சி பிலிச் கடந்த மாத இறுதியில் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X