2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்ற ஸஸாய்

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இடம்பெற்றுவரும் ஆப்கானிஸ்ஹான் பிறீமியர் லீக் போட்டியொன்றின் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை ஆப்கானிஸ்தானின் ஹஸரத்துல்லா ஸஸாய் பெற்றுள்ளார்.

குறித்த தொடரில் காபூல் ஸவனன் அணிக்காக விளையாடும் ஸஸாய், பால்க் லெஜன்ட்ஸ் அணிக்கெதிராக நேற்று  இடம்பெற்ற போட்டியிலேயே ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பால்க் லெஜன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களைக் குவித்திருந்தது. துடுப்பாட்டத்தில், கிறிஸ் கெய்ல் 80 (48), டர்விஷ் ரசூலி 50 (27), டில்ஷான் முனவீர 46 (25), அணித்தலைவர் மொஹமட் நபி 37 (15) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பரீட் அஹமட் 2, வெய்ன் பார்னல், ரஷீட் கான், ஷகிடுல்லா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு, 245 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காபூல் ஸவனன்ன் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஸஸாய், அப்துல்லா மஸரி வீசிய நான்காவது ஓவரிலேயே 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அந்தவகையில், இருபதுக்கு-20 போட்டிகளில் யுவ்ராஜ் சிங், றொஸ் விட்லிக்கு அடுத்ததாக ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றவராக தனது பெயரை ஸஸாய் பதிந்து கொண்டார்.

குறித்த ஓவரில் ஐந்தாவது பந்தில் ஆறு ஓட்டங்களைப் பெறும்போது அரைச்சதத்தைக் கடந்திருந்த ஸஸாய், இருபதுக்கு – 20 போட்டிகளில் பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற தனது ஆதர்ஷ நாயகன் கெய்ல், யுவ்ராஜ் சிங்கின் சாதனையை சமப்படுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும், 17 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றவாறு ஸஸாய் ஆட்டமிழந்திருந்த நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களையே பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. லுக் றொங்கி 47 (38), ஷகிடுல்லா 40 (20), ரஷீட் கான் 19 (07) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பென் லோலின் 3, மொஹமட் நபி, குவைஸ் அஹமட், மிர்வாயிஸ் அஷ்ரப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X