2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஒலிம்பிக் பங்கேற்பை உறுதிப்படுத்திய பெடரர்

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் தனது பங்கேற்பை உறுதிப்படுத்திய உலகின் மூன்றாம்நிலை வீரரான ரொஜர் பெடரர், முடிவை எடுக்கும் முன்னர் தனது இதயத்தைத் தான் கேட்டதாக நேற்று கூறியுள்ளார்.

சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் இதுவரையில் நான்கு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டிகளில் நான்காமிடத்தைப் பெற்றிருந்த 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த ரொஜர் பெடரர், கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்திருந்தார்.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் காலிறுதிப்போட்டி வரை முன்னேறிருந்த 38 வயதான ரொஜர் பெடரர், ஆண்களுக்கான இரட்டையர் போட்டிகளில் ஸ்டான் வவ்றிங்காவுடன் இணைந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

பிரித்தானியத் தலைநகர் 2012ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த ரொஜர் பெடரர், காயம் காரணமாக 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .