2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக்குகளை லொஸ் ஏஞ்சலஸும் பரிஸும் நடத்துகின்றன

Editorial   / 2017 செப்டெம்பர் 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை, 2024ஆம் ஆண்டிலும் 2028ஆம் ஆண்டிலும் நடத்தும் நகரங்களாக, முறையே பரிஸ், லொஸ் ஏஞ்சலஸ் நகரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவுக்கு, முக்கியமான ஒரு நிகழ்வாக இது அமைந்தது.

இந்த இரு நகரங்களுக்கும், ஒலிம்பிக் போட்டிகளை வழங்குவதென, ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், பெருவில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சர்ச்சைகளின்றி, இரு நகரங்களையும் தெரிவுசெய்யும் முடிவு, உறுதிப்படுத்தப்பட்டது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக, இவ்விரு நகரங்களும் இறுதிவரை போராடிய போதிலும், பரிஸுக்கு 2024ஆம் ஆண்டை வழங்குவதற்கும், லொஸ் ஏஞ்சலஸுக்கு 2028ஆம் ஆண்டை வழங்குவதற்கும், முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், இரு நகரங்களும் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் தலைவர் தோமஸ் பச், பரிஸ், லொஸ் ஏஞ்சலஸ், சர்வதேச செயற்குழு என மூன்று தரப்பினருக்கும், வெற்றி கிடைத்த நிலை என்று தெரிவித்தார்.

“இது அதிசயமானதும் தனித்துவமானதுமான வெற்றி” என, பரிஸ் தரப்புத் தெரிவிக்க, இந்த வெற்றியை “பிரான்ஸுக்கான வெற்றி” என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் புகழ்ந்தார்.

2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள், பரிஸில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ள 3ஆவது தடவையாக அமையும். இதற்கு முன்னர் இறுதியாக அந்நகரம் போட்டிகளை நடத்திச் சரியாக 100 ஆண்டுகளின் பின்னர், 2024ஆம் ஆண்டுப் போட்டிகளை, அந்நகரம் நடத்தவுள்ளது. இடைப்பட்ட காலத்தில், போட்டிகளை நடத்துவதற்கு, 3 தடவைகள், பிரான்ஸ் முயன்றிருந்தது.

1996ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. 1996ஆம் ஆண்டில் அத்லான்டாவில் போட்டிகள் நடைபெற்ற போது, சென்டினியல் ஒலிம்பிக் பூங்கா குண்டுவெடிப்புக் காரணமாக, குழப்பகரமான ஓர் ஒலிம்பிக்காக இருந்த நிலையில், அதைச் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பு, லொஸ் ஏஞ்சலஸுக்குக் கிடைக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .