2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஓய்வு கோரிய தமிம் இக்பால்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டி மற்றும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின்போது ஓய்வை பங்களாதேஷின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான தமிம் இக்பால் கோரியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிம் இக்பால் கோரிய ஓய்வானது அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  உலகக் கிண்ணத்தின்போது எட்டு இனிங்ஸ்களில் 29.37 என்ற சராசரியில் ஒரு அரைச்சதத்துடன் 235 ஓட்டங்களைப் பெற்ற தமிம் இக்பால், அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும் வெறுமனவே 21 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.

அந்தவகையில், தனது உடற்றகுதியில் பணியாற்றும் பொருட்டு பங்களாதேஷை விட்டு அடுத்த சில நாட்களில் வெளியேறவுள்ள தமிம் இக்பால், இரண்டு டெஸ்ட்கள், மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட பங்களாதேஷின் இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்துக்கு தயாராகுவார் எனத் தெரிகிறது.

இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து ஓய்வளிக்குமாறு பங்களாதேஷின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸனின் கோரிக்கையைத் தொடர்ந்து அவருக்கு குறித்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே தற்போது தமிம் இக்பாலுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கெதிரான 2017ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரின்போதும் ஷகிப் அல் ஹஸனுக்கு பங்களாதேஷ் ஓய்வு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .