2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஓய்வு பெறுகிறார் பீற்றர் செக்

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் கோல் காப்பாளர் பீற்றர் செக், நடப்பு பருவகாலத்துடன் ஓய்வுபெறுகிறார்.

இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியில் 11 ஆண்டுகள் இருந்த 36 வயதான பீற்றர் செக், 2015ஆம் ஆண்டு ஜூனில் ஆர்சனலில் இணைந்திருந்தார்.

செக் குடியரசின் முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரரான பீற்றர் செக், “பிறீமியர் லீக்கில் 15 ஆண்டுகளாக விளையாடி, ஒவ்வொரு இயலுமான தனித்த கிண்ணத்தையும் வென்று, நான் அடையவென நிர்ணயித்த அனைத்தையும் அடைந்துள்ளதாக நான் உணருகிறேன்.

இப்பருவகாலத்தில் மேலுமொரு கிண்ணத்தை வெல்வதற்கு ஆர்சனலில் நான் கடுமையாகப் பணியாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.

றீடிங் அணியின் ஸ்டீவன் ஹன்டுடன் 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மோதி மண்டையோடு முறிவடைந்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியேற்பட்டபோது பீற்றர் செக்கின் விளையாடும் காலம் சந்தேகத்துக்கிடமானது. எனினும் மூன்று மாதங்களைத் தொடர்ந்து போட்டிகளில் மீண்டும் பங்கேற்ற பீற்றர் செக், அன்றிலிருந்து தலையைக் காக்கும் கவசத்தை போட்டிகளின்போது அணிந்து வருகின்றார்.

செல்சியில், ஒரு சம்பியன்ஸ் லீக், நான்கு பிறீமியர் லீக் பட்டங்கள் உள்ளடங்கலாக 13 கிண்ணங்களை பீற்றர் செக் வென்றிருந்தார். இதுதவிர, செல்சியின் சாதனையாக அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து 228 போட்டிகளில் எதிரணியை கோலெதுவும் புகுத்த விடாமல் தடுத்திருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .