2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஓய்வு பெற்றார் இகர் கஸிலாஸ்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்னாள் அணித்தலைவரும், ஸ்பெய்ன் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்னாள் அணித்தலைவருமான இகர் கஸிலாஸ், தனது 39ஆவது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கோல் காப்பாளரான இகர் கஸிலாஸ், றியல் மட்ரிட்டில் இருந்த 16 ஆண்டுகளில் 725 போட்டிகளில் விளையாடியதுடன், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை மூன்று தடவை வென்றதுடன், ஐந்து தடவைகள் ஸ்பானிய லா லிகா சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

இதுதவிர, 2010ஆம் ஆண்டு ஸ்பெய்ன் உலகக் கிண்ணத்தையும், 2008, 2012ஆம் ஆண்டுகளில் யூரோ கிண்ணத்தை வெல்லவும் இகர் கஸிலாஸ் உதவியிருந்தார்.

போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவில் கடந்த 2015ஆம் ஆண்டு இணைந்திருந்த இகர் கஸிலாஸ், கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மாரடைப்பொன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து விளையாடியிருக்கவில்லை.

ஸ்பெய்னுக்காக 167 போட்டிகளில் இகர் கஸிலாஸ் விளையாடியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X