2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஓய்வுக்கு முன்னர் ஒன்பதாமிடத்துக்கு முன்னேறுவாரா மலிங்க?

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் லசித் மலிங்க, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஒன்பதாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளார்.

தற்போது 225 போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள 10ஆம் இடத்திலுள்ள மலிங்க, தனது இறுதிப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பட்சத்தில், 271 போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒன்பதாமிடத்திலுள்ள இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் அனில் கும்ப்ளேயை பின்தள்ளி ஒன்பதாமிடத்தைப் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து 2011ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்திருந்த மலிங்க, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் வரைக்கும் இலங்கைக்காக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள மலிங்க, 73 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தவிர, நடந்து முடிந்த உலகக் கிண்ணத்திலும் இலங்கை சார்பில் அதிகபட்சமாக 13 விக்கெட்டுகளை மலிங்கவே கைப்பற்றிருந்தார். இரண்டாமிடத்தில் காணப்படும் இசுரு உதான ஆறு விக்கெட்டுகளையே கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X