2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோப்பா இத்தாலியாவைக் கைப்பற்றியது ஜுவென்டஸ்

Gopikrishna Kanagalingam   / 2017 மே 18 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவந்த விலகல் முறையிலான கோப்பா இத்தாலியக் கிண்ணத்தை ஜுவென்டஸ் கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டியில் லேஸியோவை வென்றே ஜுவென்டஸ் சம்பியனாகியுள்ளது.  

இப்போட்டியின் 12ஆவது நிமிடத்திலேயே, சக பிரேஸிலிய வீரரான அலெக்ஸ் ஸான்ரோவிடமிருந்து பெற்ற நீண்ட தூரப் பந்துப் பரிமாற்றத்தை டனி அல்விஸ் கோலாக்க முன்னிலை பெற்ற ஜுவென்டஸ், போலோ டிபாலாவின் “கோணர்” ஒன்றிலிருந்து வந்த பந்தை, அலெக்ஸ் ஸான்ட்ரோ, லியனார்டோ பொனுச்சியிடம் வழங்க, அவர் அதை போட்டியின் 24ஆவது நிமிடத்தில் கோலாக்க, இக்கோலுடன் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வெற்றிபெற்று சம்பியனாகியது.  

இம்முறையுடன் சேர்த்து, கோப்பா இத்தாலியாவை மூன்று முறை தொடர்ச்சியாகக் கைப்பற்றியுள்ள ஜுவென்டஸ், கோப்பா இத்தாலியாவை, இவ்வாறு மூன்று முறை தொடர்ச்சியாகக் கைப்பற்றும் முதலாவது அணியாக, தமது பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளது.  

“சீரி ஏ” புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜுவென்டஸ், நாளை மறுதினம் (21) இடம்பெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றால், தொடர்சியாக ஆறாவது தடவையாக, “சீரி ஏ” பட்டத்தையும் கைப்பற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அடுத்த மாதம் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், றியல் மட்ரிட்டை ஜுவென்டஸ் எதிர்கொள்கிறது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X