2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கருணாரத்னவின் சதத்துடன் போராடுகிறது இலங்கை

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், காலியில் இன்று ஆரம்பித்த நிலையில் இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை போராடி வருகிறது.

இப்போட்டியில், முதலில் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கையணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கஜிஸோ றபாடா 4, தப்ரையாஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற தென்னாபிரிக்க அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு நான்கு ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் டீன் எல்கர் நான்கு ஓட்டங்களுடனும் கேஷவ் மஹராஜ் ஓட்டமெதனையும் பெறாமலுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ரங்கன ஹேரத் வீழ்த்தினார்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் மூன்றாம் நாள் காலையில் இரண்டு மணித்தியாலங்களாக களமிறங்க இலங்கையணி களமிறங்க மறுத்தமைக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணை நேற்று  மாலை ஆறு மணியளவில் ஆரம்பித்து ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்திருந்தது.

அந்தவகையில், இந்த விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .