2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காலிறுதியில் செல்சி, ஆர்சனல், டொட்டென்ஹாம்

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, செல்சி, ஆர்சனல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்கள் தகுதிபெற்றுள்ளன.

இதில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற டேர்பி கவுண்டி அணியுடனான தமது இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றிருந்தது. செல்சி சார்பாக, சீஸ்க் பப்ரிகாஸ் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய இரண்டு கோல்களும் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தன. டேர்பி கவுண்டி அணி சார்பாக ஜக் மரியொட், மார்ட்டின் வக்ஹோர்ன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற பிளக்பூல் அணியுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு ஆர்சனல் தகுதிபெற்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, ஸ்டீபன் லிச்னைஸ்டர், எமிலே ஸ்மித் றொவே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிளக்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை போடி ஓ கோணர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, சண் ஹெயுங் மின் இரண்டு கோல்களையும் பெர்ணான்டோ லொரென்டே ஒரு கோலையும் பெற்றனர். வெஸ்ட்ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகாஸ் பெரேஸ் பெற்றிருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .