2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிரான்ட் ஸ்லாம்களில் புது விதிகள்

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு முதல் கிரான்ட் ஸ்லாம்களில் புது விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கிரான்ட் ஸ்லாம்களில், அரங்களுக்குள் நுழைந்து, ஏழு நிமிடங்களுக்குள் விளையாடத் தயாரகவிட்டால், 20,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இதேவேளை பரிட்சார்த்தமாக, அடுத்தாண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின்போது புள்ளியொன்றைப் பெற்று 25 செக்கன்களுக்குள் சேர்வ் செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு வருகிறது.

இதுதவிர, 2019ஆம் ஆண்டு முதல், ஆண்டின் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களான, அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர், விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடர் ஆகிய நான்கிலும் இதுவரை தொடரொன்றுக்காக தரப்படுத்தப்படும் முன்னிலை 32 வீரர்களுக்குப் பதிலாக, முன்னிலை வீரர்கள் 16 பேர் தரப்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .