2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கிறிஸ்டல் பலஸை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான் போட்டியில் லிவர்பூல் வென்றது.

இப்போட்டியின் முதற்பாதி முடிவடையும் நேரத்தில் கிறிஸ்டல் பலஸின் பின்கள வீரர் மமடு ஸாக்கோவால் லிவர்பூலின் முன்கள வீரரான மொஹமட் சாலா வீழ்த்தப்பட பெனால்டி வழங்கப்பட்டது. இந்நிலையில், குறித்த பெனால்டியை ஜேம்ஸ் மில்னர் கோலாக்க, முன்னிலை பெற்றவாறு முதற்பாதியை லிவர்பூல் முடித்துக் கொண்டது.

தொடர்ந்த இரண்டாம் பாதி முடிவடைய 15 நிமிடங்கள் இருக்கையில், கோல் பெறும் நோக்கில் சென்ற மொஹமட் சாலாவை கிறிஸ்டல் பலஸின் இளம் பின்கள வீரரான ஆரோன் வான்-பிஸாகா வீழ்த்திய நிலையில், மத்தியஸ்தரால் சிவப்பு அட்டை காட்டப் பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன்பின்னர், போட்டியின் இறுதிக் கணங்களில் தமது அரைப் பகுதியிலிருந்து முன்னேறிச் சென்ற லிவர்பூல் சாடியோ மனே பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

அந்தவகையில், இரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ள ஆறு அணிகளிலொன்றாக லிவர்பூல் காணப்படுகின்றது. மன்சஸ்டர் சிற்றி, லிவர்பூல், செல்சி, வட்போர்ட், டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், போர்ண்மெத் ஆகிய அணிகள் தலா ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் குறித்த வரிசையில் காணப்படுகின்றன. ஒரு போட்டியில் வென்ற மன்சஸ்டர் யுனைட்டட் மூன்று புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்திலும் இரண்டு போட்டிகளிலும் தோற்ற ஆர்சனல் புள்ளிகளெதையும் பெறாமல் 17ஆம் இடத்திலும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .