2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குளிர்கால ஒலிம்பிக்: வென்றவதுக்கெதிராக ஊக்கமருந்துக்கெதிரான வழக்கு

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவின் பியொங்சங்கில் இடம்பெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரஷ்ய சுருள்வு விளையாட்டு வீரரான அலெக்ஸான்டர் குருஷெல்னிட்ஸ்கைக்கெதிராக ஊக்க மருந்துக்கெதிரான வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுக்கான தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தனது மனைவியுடன் இணைந்து கலப்பு இரட்டையருக்கான சுருள்வில் கடந்த வாரம் வெண்கலப் பதக்கம் வென்ற அலெக்ஸான்டர் குருஷெல்னிட்ஸ்கை மெல்டோனியர் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் கோரிக்கையொன்றையடுத்தே 25 வயதான அலெக்ஸான்டர் குருஷெல்னிட்ஸ்கைக்கெதிரான வழக்கை விளையாட்டுக்கான தீர்ப்பாயம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், எப்போது இந்த வழக்கு இடம்பெறும் என திகதி தீர்மானிக்கப்படவில்லை.

ரஷ்யாவின் சோச்சியில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்றமை காரணமாக, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்ற பெயரில் 168 போட்டியாளர்கள் இம்முறை கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .