2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொபினை வென்று சம்பியனானார் டிமிட்ரோவ்

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இடம்பெற்றுவந்த டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் ஆறாம் நிலை வீரரான, பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ் சம்பியனாகியுள்ளார். குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், உலகின் எட்டாம் நிலை வீரரான, பெல்ஜியத்தின் டேவிட் கொபினை வென்றே கிறிகர் டிமிட்ரோவ் சம்பியனாகியுள்ளார்.

இதேவேளை, ஆண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் விளையாடக் கூடிய வகையில் இருக்கும் முதல்நிலை எட்டு வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில் முதன்முறையாக இம்முறையே பங்கேற்ற கிறிகர் டிமிட்ரோவ் சம்பியனாகியுள்ளார். அந்தவகையில், கடந்த 19 ஆண்டுகளில், இத்தொடரில் அறிமுகத்தை மேற்கொண்ட நபரொருவர் சம்பியனாகுவது இதுவே முதற்தடவையாகும்.

இலண்டனில் நேற்று  இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில், 26 வயதான டேவிட் கொபினை, 26 வயதான கிறிகர் டிமிட்ரோவ் வென்றிருந்தார்.

தனது குழுநிலைப் போட்டிகள் அனைத்தையும் வென்றிருந்த கிறிகர் டிமிட்ரோவ், உலகின் ஒன்ப்தாம் நிலை வீரரான, ஐக்கிய அமெரிக்காவின் ஜக் சொக்கை அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தார். மறுபக்கம், உலகின் இரண்டாம் நிலை வீரரான, சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரை வென்று இறுதிப் போட்டியில் டேவிட் கொபின் நுழைந்திருந்தார்.

அந்தவகையில், இத்தொடரில் சம்பியனானனதன் மூலம் வெளியிடப்படவுள்ள தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்துடன் இவ்வாண்டை கிறிகர் டிமிட்ரோவ் பூர்த்தி செய்யவுள்ளார். மறுபக்கம் இத்தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய டேவிட் கொபின் ஒரு இடம் முன்னேறி, ஏழாமிடத்துடன் இவ்வாண்டை பூர்த்தி செய்யவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .