2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோப்பா அமெரிக்கா தொடர்: கொலம்பியாவிடம் தோற்றது ஆர்ஜென்டீனா

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், ஃபொன்டே நோவா அரங்கத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொலம்பியாவுடனான குழு பி போட்டியொன்றில் ஆர்ஜென்டீனா தோற்றது.

தமதணித்தலைவர் றடமெல் ஃபல்காவோ, மத்தியகளவீரர் ஜேம்ஸ் றொட்றிகாஸுடன் காணப்பட்ட கொலம்பியா, இப்போட்டியின் முதற்பாதியில் பலமாகத் தோற்றமளித்தபோதும், முதற்பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், இரண்டாவது பாதியில் தமது மத்தியகளவீரர் ஏஞ்சல் டி மரியாவை, முன்களவீரர் றொட்றிகோ டி போல் ஆர்ஜென்டீனா பிரதியீடு செய்த நிலையில் அவ்வணி பலமானதாகக் காட்சியளித்தது.

எவ்வாறெனினும், ஆர்ஜென்டீனாவின் பின்களவீரர் நிக்கலஸ் ஒட்டமென்டியின் கோல் கம்பத்தை நோக்கிய உதை, கொலம்பியாவின் கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினாவால் தடுக்கப்பட்டு அவ்வணியின் நட்சத்திர முன்களவீரர் லியனல் மெஸ்ஸியிடம் வந்திருந்தபோதும் அவர் அதைக் கோலாக்கத் தவறியிருந்தார்.

பின்னர், கொலம்பியாவின் பெனால்டி பகுதியை நோக்கி பந்துடன் லியனல் மெஸ்ஸி தனித்துச் சென்றிருந்தபோதும் அவரால் கோல் கம்பத்தை நோக்கி உதைய முடிந்திருக்க முடியவில்லை. இதேவேளை, கொலம்பியாவின் முன்களவீரர் ஜுவான் குவாராடோவால் லியனல் மெஸ்ஸி வீழ்த்தப்பட்டபோது பாரியதொரு கலகம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆர்ஜென்டீனாவின் பின்களவீரர்களுக்குள்ளால் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் இலாவகமாக ஜேம்ஸ் றொட்றிகாஸ் வழங்கிய பந்தை கொலம்பியாவின் றோஜர் மார்ட்டின்ஸ் அபாரமாக கோலாக்க முன்னிலை பெற்ற கொலம்பியா, அடுத்த 15ஆவது நிமிடத்தில் சக மத்தியகளவீரர் ஜெஃபெர்சன் லெர்மா வழங்கிய பந்தை கொலம்பியாவின் முன்களவீரரான டுவான் ஸபட்டா கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வென்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X