2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோப்பா அமெரிக்கா தொடர்: ஜப்பானை வென்றது சிலி

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், சா போலோவில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு சி போட்டியொன்றில் ஜப்பானை நடப்புச் சம்பியன்களான சிலி வென்றது.

இப்போட்டியின் 41ஆவது நிமிடத்தில், சக மத்தியகளவீரரான சார்ள்ஸ் அரங்குய்ஸிடமிருந்தான மூலையுதையை தலையால் முட்டிக் கோலாக்கிய சிலியின் மத்தியகளவீரரான எரிக் புல்கர் தனதணிக்கு முன்னிலையை வழங்க முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் சிலி முன்னிலையிலிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் 54ஆவது நிமிடத்தில், சக பின்களவீரரான மெளரிசியோ இஸ்லா வழங்கிய பந்தை சிலியின் முன்களவீரரான எடுவார்டோ வர்காஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைய அது ஜப்பானின் பின்களவீரரான தகெஹிரோ தொமியசுவில் பட்டுக் கோலாக, தமது முன்னிலையை சிலி இரட்டிப்பாக்கியது.

இதைத் தொடர்ந்து, 82ஆவது நிமிடத்தில் சார்ள் அரங்குய்ஸ் வழங்கிய பந்தை சிலியின் முன்களவீரரான அலெக்ஸிஸ் சந்தேஸ் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற சிலி, அடுத்த நிமிடத்தில் அலெக்ஸிஸ் சந்தேஸ் வழங்கிய பந்தை எடுவார்டோ வர்காஸ் கோலாக்கியதோடு இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், 12 அணிகள் கொண்ட குறித்த தொடரில் கடினமான குழு சியில் குறித்த போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் முதலாமிடத்துக்கு சிலி முன்னேறிய நிலையில், இரண்டாமிடத்தில் உருகுவே காணப்படுகின்றது.

இந்நிலையில், நாளை மறுதினம் அதிகாலை மூன்று மணிக்கு இடம்பெறவுள்ள குழு பி போட்டியொன்றில் கட்டாரை கொலம்பியா எதிர்கொள்வதுடன், ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள மற்றைய குழு பி போட்டியில் பராகுவேயை ஆர்ஜென்டீனா எதிர்கொள்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X