2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கோப்பா அமெரிக்கா தொடர்: பிரேஸில், வெனிசுவேலா போட்டி சமநிலை

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், சல்வடோரில் இன்று காலை இடம்பெற்ற வெனிசுவேலாவுடனான குழு ஏ போட்டியொன்றை சமநிலையில் பிரேஸில் முடித்திருந்தது.

பிரேஸிலின் மூன்று கோல்கள் நிராகரிக்கப்பட்டதுடன், தொடர்ச்சியான வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்த நிலையிலேயே இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியின் 38ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் முன்களவீரரான றொபேர்ட்டோ ஃபெர்மினோ கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்தியிருந்தபோதும் இக்கோல் பெறப்படுவதற்கு முன்பாக வெனிசுவேலாவின் மிக்கேல் வில்லனுவேவா விதிமுறைகளை மீறி கையாளப்பட்டிருந்தார் எனத் தெரிவ்த்து குறித்த கோல் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இரண்டாவது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய பிரேஸிலின் முன்களவீரரான கப்ரியல் ஜெஸூஸ் கோலைப் பெற்றபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பில் குறித்த கோல் பெறப்படுவதற்கு முன்பாக றொபேர்ட்டோ ஃபெர்மினோ ஓஃப் சைட்டில் இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து குறித்த கோலும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போட்டி முடிவடைவதற்கு மூன்று நிமிடங்களிருக்கையில் பிரேஸிலின் முன்களவீரர் பிலிப் கோச்சினியோ கோலைப் பெற்று பிரேஸிலுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து காலிறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் எனக் கருதப்பட்டபோதும், குறித்த கோலும் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பில் றொபேர்ட்டோ ஃபெர்மினோ ஓஃப் சைட்டில் இருந்தமை காரணமாக நிராகரிக்கப்பட போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அந்தவகையில், இப்போட்டி முடிவிலும் குழு ஏ புள்ளிகள் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் முதலாமிடத்திலேயே பிரேஸில் காணப்படுகின்ற நிலையில், பெருவுடனான தமது இறுதி குழுநிலைப் போட்டியில் சமநிலை முடிவைப் பெற்றாலே அவ்வணியுடன் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X