2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோப்பா இத்தாலியா: காலிறுதியில் ஜுவென்டஸ்

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே விலகல் முறையில் நடைபெறுகின்ற கோப்பா இத்தாலியா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றுள்ளது.

இலங்கை நேரப்படி, இன்று அதிகாலை இடம்பெற்ற காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெனோவா அணியை வென்றே காலிறுதிப் போட்டுக்கு ஜுவென்டஸ் தகுதி பெற்றுள்ளது. ஜுவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா, கொன்ஸலோ ஹியூகைன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், 1-2 என்ற கோல் கணக்கில் டொரினோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த றோமா தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .