2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

க்றூஸின் இறுதி நிமிடக் கோலால் சுவீடனை வென்றது ஜேர்மனி

Editorial   / 2018 ஜூன் 24 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்றிரவு இடம்பெற்ற குழு எவ் போட்டியொன்றில் டொனி க்றூஸ் பெற்ற கோல் காரணமாக, சுவீடனை நடப்புச் சம்பியன்கள் ஜேர்மனி வென்றது.

இப்போட்டியின் 32ஆவது நிமிடத்தில் ஓலா டொய்வோனன் பெற்ற கோலின் மூலமாக சுவீடன் முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் 48ஆவது நிமிடத்தில் மார்கோ றொயுஸ் பெற்ற கோல் காரணமாக கோலெண்ணிக்கையை ஜேர்மனி சமப்படுத்தியது.

எனினும் இப்போட்டியின் 82ஆவது நிமிடத்தில், இப்போட்டியில் இரண்டாவது தடவையாக மஞ்சள் அட்டை காட்டப் பெற்ற ஜேர்மனியின் மத்திய பின்கள வீரர் ஜெரோம் புவட்டங், சிவப்பு அட்டை காட்டப் பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடத்தில் ஜேர்மனியின் நட்சத்திர மத்தியகள வீரரான டொனி க்றூஸ் பெற்ற அபாரமான கோல் காரணமாக 2-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் ஜேர்மனி வென்றது.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற மற்றைய குழு எவ் போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை மெக்ஸிக்கோ வென்றது. மெக்ஸிக்கோ சார்பாக, கார்லோஸ் வெலா, ஸ்கேவியர் பெர்ணான்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, தென்கொரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை சொன் ஹியூன் மின் பெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற குழு ஜி போட்டியொன்றில், 5-2 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, ஈடின் ஹஸார்ட், றொமேலு லுக்காக்கு ஆகியோர் தலா இரண்டு கோல்களையும் மிச்சி பச்சுவாய் ஒரு கோலையும் பெற்றனர். துனீஷியா சார்பாக, டிலான் போன், வாபி கஸ்ரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .