2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சப்ராஸுக்கு நான்கு போட்டித் தடை

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டுக்கு, நான்கு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது தென்னாபிரிக்காவின் சகலதுறைவீரர் அன்டிலி பெக்லுவாயோவை நோக்கி தான் தெரிவித்த கருத்தொன்றைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் நிறவெறிக்கெதிரான நடத்தைக் கோவையை மீறியதை சப்ராஸ் ஒத்துக்கொண்டமையத் தொடர்ந்தே நான்கு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

“ஹேய் கறுப்பு நபரே, எங்கே உனது அம்மா இன்று அமர்ந்து கொண்டிருக்கிறார்? என்ன [பிரார்த்தனையை] உனக்கு இன்று சொல்ல அவர் வைத்திருக்கிறார்” என சப்ராஸ் உருது மொழியில் தெளிவாகக் கூறுவது விக்கெட் ஒலிவாங்கிகளில் குறித்த போட்டியின்போது பதிவுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது நேர்முக வர்ணணையில், சப்ராஸ் என்ன கூறியதாக பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜாவை வர்ணணையாளர் மைக் ஹெய்ஸ்மன் வினவியபோது, அவர் அதை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம், அது பெரியதொரு நீண்ட வசனம் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான இன்றைய நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றிருக்காத சப்ராஸ், ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியையும் தென்னாபிரிக்காவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சப்ராஸ் இல்லாத நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சிரேஷ்ட வீரர் ஷொய்ப் மலிக் தலைமை தாங்கியிருந்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .