2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமநிலையில் செல்சி – லிவர்பூல் போட்டி

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணிக்கும் லிவர்பூலுக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

குறித்த போட்டியின் 25ஆவது நிமிடத்தில் ஈடின் ஹசார்ட் பெற்ற கோலின் மூலம் செல்சி முன்னிலை பெற்றபோதும் 89ஆவது நிமிடத்தில் டானியல் ஸ்டரிட்ஜ் பெற்ற கோலோடு 1-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் போட்டியை லிவர்பூல் சமப்படுத்தியது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணி வென்றிருந்தது. வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாக, பிலிபி அன்டர்சன், மார்கோ அர்னோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்போர்ட் பெற்றார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பிரைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங், சேர்ஜியோ அகுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், ஹட்டர்ஸ்பீல்ட் டெளன் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஹரி கேன் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற வட்போர்ட் அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, மெசுட் ஏஸில் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .