2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சமநிலையில் லிவர்பூல், சிற்றி போட்டி

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லிவர்பூலின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணிக்கும் மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

லிவர்பூலின் பின்கள வீரரான வேர்ஜில் வான் டிஜிக்கால் மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரரான லெரோய் சனே வீழ்த்தப்பட, போட்டியின் 85ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை மன்செஸ்டர் சிற்றியின் றியாட் மஹ்ரேஸ் கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்தியதோடு, மேலுமோரு கோல் பெறும் உதையொன்றை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியதில், போட்டி முடிவில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இப்போட்டியில், மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரர் சேர்ஜியோ அகுரோவுக்கு மேல் லிவர்பூலின் பின்கள வீரர் டெஜன் லொவ்ரேன் வீழ்ந்திருந்தபோது பெனால்டி வழங்குமாறு கோரப்பட்டபோது பெனால்டி வழங்கப்படாததோடு, வான் டிஜிக் பந்தைக் கையாண்டிருந்தபோதும் பெனால்டி வழங்கப்படாததோடு, சிற்றியின் பெர்ணான்டின்ஹோ அவரைத் தள்ளினாரென எச்சரிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, செளதாம்டனின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, ஈடின் ஹசார்ட், றொஸ் பார்க்லி, அல்வரோ மொராட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், புல்ஹாம் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, பியரி எம்ரிக் அபுமெயாங் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஆரோன் றம்சி ஒரு கோலைப் பெற்றிருந்தார். புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே ஸ்குறில் பெற்றிருந்தார்.

அந்தவகையில், குறித்த போட்டிகளின் முடிவில் மன்செஸ்டர் சிற்றி, செல்சி, லிவர்பூல் ஆகியன பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் தலா 20 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களில் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .