2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சமர்செற்றுடனான பிளன்டரின் ஒப்பந்தம் இரத்தாகியது

Editorial   / 2020 மே 12 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வேர்ணன் பிலாந்தருடனான இங்கிலாந்துக் கவுண்டியான சமர்செற்றின் ஒப்பந்தமானது பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சமர்செற் அறிவித்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்த பின்னர் கொல்பக் பதிவொன்றில் சமர்செற்றுடன் இரண்டாண்டு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே இருக்கின்ற அனைத்து கொல்பக் பதிவுகளும் இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி இரத்துச் செய்யப்படவுள்ளது.

எனினும், கவுண்டி போட்டிகளிலும், ஒருநாள் கிண்ணப் போட்டிகளிலும் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து இரண்டாக அதிகரிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் சபையை இங்கிலாந்தின் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கோரியுள்ளது.

அந்தவகையில், வெளிநாட்டு வீரரொருவராக வேர்ணன் பிலாந்தர் தொடர்ந்திருக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்தாண்டு வேர்ணன் பிலாந்தரை மீளக் கைச்சாத்திடுவதை ஊடக வெளியீட்டில் சமர்செற் வெளிப்படுத்தியிருக்காதபோதும், அச்சந்தர்ப்பத்துக்கான கதவை சமர்செற்றின் கிரிக்கெட் பணிப்பாளர் அன்டி ஹுரி திறந்து வைத்துள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .