2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனாக முடிசூடியது பார்சிலோனா

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில் சம்பியனாக பார்சிலோனா முடிசூடியுள்ளது. டெபோர்ட்டிவோ லா கொரனா அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே லா லிகாவில் 25ஆவது தடவையாக பார்சிலோனா சம்பியனாகியது.

இப்போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே, உஸ்மான் டெம்பிலி கொடுத்த பந்தை பிலிப் கோச்சினியோ கோலாக்க முன்னிலை பெற்ற பார்சிலோனா, 38ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் கொடுத்த பந்தை லியனல் மெஸ்ஸி கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாட்ட்கிக் கொண்டது.

எனினும் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் லூகாஸ் பெரேஸ் பெற்ற கோலின் மூலம் பார்சிலோனாவின் முன்னிலையை டெபொர்ட்டிவோ லா கொரனா ஒன்றாகக் குறைத்துக் கொண்டதுடன் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் எம்ரே கொலக் பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையை டெபோர்ட்டிவோ லா கொரனா சமப்படுத்திக் கொண்டது.

எவ்வாறெனினும், போட்டியின் 82ஆவது நிமிடத்திலும் 85ஆவது நிமிடத்திலும் மாற்று வீரராகக் களமிறங்கிய டெனிஸ் சுவாரஸ் கொடுத்த பந்தை லியனல் மெஸ்ஸி கோலாக்க, இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்று கொண்டது.

இப்பருவகால இறுதியுடன் பார்சிலோனாவிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்த பார்சிலோனா அணியின் தலைவர் அன்ரே இனியஸ்டா, இப்போட்டியின் இறுதி மூன்று நிமிடங்களில் மாற்று வீரராகக் களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், பார்சிலோனாவுக்கு இன்னும் நான்கு போட்டிகள் இருக்கையில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகளுடன் இருக்கின்ற நிலையில், இரண்டாமிடத்திலிருக்கின்ற அத்லெட்டிகோ மட்ரிட் மூன்று போட்டிகள் இருக்கின்ற நிலையில் 75 புள்ளிகளுடன் இருக்கின்ற நிலையில் அவற்றில் வெற்றிபெற்றாலும் பார்சிலோனாவை முந்த முடியாது என்ற நிலையிலேயே லா லிகா சம்பியன்களாக பார்சிலோனா முடிசூடியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .