2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானது இஸ்லாமபாத் யுனைட்டெட்

Editorial   / 2018 மார்ச் 26 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இவ்வாண்டு தொடரில் இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சம்பியனானது.

கராச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில், பெஷாவர் ஸல்மி அணியை வென்றே இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சம்பியனாகியது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பெஷாவர் ஸல்மி அணி,  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கிறிஸ் ஜோர்டான் 36 (26), லியாம் டோஸன் 33 (30), வஹாப் றியாஸ் ஆட்டமிழக்காமல் 28 (14), அன்றே பிளட்சர் 21 (15) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷடாப் கான் 3, சமித் பட்டேல், ஹுஸைன் தலட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி,  16.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், லுக் றொங்கி 52 (26), சஹிப்ஸடா பர்ஹான் 44 (33), ஆசிப் அலி ஆட்டமிழக்காமல் 26 (06) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வஹாப் றியாஸ், கிறிஸ் ஜோர்டான், ஹஸன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாகவும் இத்தொடரின் நாயகனாகவும் லுக் றொங்கி தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .