2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான பிரெஞ்சு லீக் கிண்ணத் தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.

போர்டெக்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரரான கிலியான் மப்பே மொனாக்கோவின் கமில் கிலிக்கால் வீழ்த்தப்பட்டார். இதனையடுத்து, காணொளி உதவி மத்தியஸ்தருடன் மூன்று நிமிடங்களளவில் ஆலோசித்த கிளமன்ட் டுர்பின், பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு பெனால்டி வழங்குவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், குறித்த பெனால்டியை பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு நட்சத்திர முன்கள வீரரான எடின்சன் கவானி கோலாக்க, போட்டியின் எட்டாவது நிமிடத்திலேயே பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, தமது அணியின் பாதிக்குள்ளிலிருந்து பந்தைக் கொண்டு வந்து மிகச் சாதுர்யமாக மொனாக்கோவின் பின்கள வீரர்களுக்குள்ளால் சக முன்கள வீரரான அஞ்சல் டி மரியாவுக்கு கிலியான் மப்பே வழங்கினார். அவர் அதை போட்டியின் 20ஆவது நிமிடத்தில் கோலாக்கி தனது முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

தொடர்ந்து, மொனாக்கோ அணியின் தலைவரும் முன்கள வீரருமான றடமெல் பல்காவோ, றொனி லொபேஸிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கியபோதும் சர்ச்சைக்குரிய முறையில் றடமெல் பல்காவோ ஓப் சைட்டில் இருந்ததாகக் கூறி காணொளி உதவி மத்தியஸ்தருடன் கலந்தாலோசித்து அக்கோலை கிளமன்ட் டுர்பின் வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையில், போட்டியின் 85ஆவது நிமிடத்தில் கிலியான் மப்பேயிடமிருந்து பெற்ற பந்தை எடின்சன் கவானி கோலாக்க, இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பரிஸ் ஸா ஜெர்மைன் ஐந்தாவது தடவையாக தொடர்ச்சியான பிரெஞ்சு லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .